கோவில்பட்டியில், இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்


கோவில்பட்டியில், இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்
x
தினத்தந்தி 18 March 2017 1:00 AM IST (Updated: 17 March 2017 11:55 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளை மருத்துவ குழுவினர் பரிசோதித்து, தகுதியின் அடிப்படையில் தேசிய அடையாள அட்டை வழங்குகிறார்கள். எனவே மாற்

கோவில்பட்டி,

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளை மருத்துவ குழுவினர் பரிசோதித்து, தகுதியின் அடிப்படையில் தேசிய அடையாள அட்டை வழங்குகிறார்கள்.

எனவே மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 5 எண்ணிக்கை, ரே‌ஷன் கார்டு அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரில் முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

40 சதவீதத்துக்கு அதிகமாக ஊனமுற்றவர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் மாதாந்திர உதவித்தொகை வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும். எனவே கை, கால் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் குறைபாடு உடையவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பார்வையற்றவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.


Next Story