பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பயிற்சி டாக்டர்கள், மருத்துவ கல்லூரி மாணவிகள் தர்ணா போராட்டம்

பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பயிற்சி டாக்டர்கள், மருத்துவ கல்லூரி மாணவிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 18 March 2017 3:00 AM IST (Updated: 18 March 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பயிற்சி டாக்டர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பயிற்சி டாக்டர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவ மனையில் நேற்று முன்தினம் நோயாளியின் உறவினரால் பயிற்சி டாக்டர் தாக்கப்பட்டதாக கூறி பயிற்சி டாக்டர்கள் ஆஸ்பத்திரிக்கு வெளியில் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சென்னையில் பயிற்சி டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பயிற்சி டாக்டர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள டீன் அலுவலகம் அருகில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோ‌ஷங்கள்

டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இந்த கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.

Next Story