திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சாலை மறியல்
திருவாரூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
சாலை மறியல்
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்கள், கணினி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் தனி ஊழியர் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வசந்தன், மாவட்ட பொருளாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சவுந்தரராஜன், மாவட்ட தலைவர் பைரவநாதன், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், மாவட்ட பொருளாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
200 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் திருவாரூர்-தஞ்சை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story