தூத்துக்குடியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு சித்தா ஆஸ்பத்திரி நடத்தி வந்த போலி பெண் டாக்டர் சிக்கினார் போலீசாரிடம் ஒப்படைப்பு


தூத்துக்குடியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு சித்தா ஆஸ்பத்திரி நடத்தி வந்த போலி பெண் டாக்டர் சிக்கினார் போலீசாரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 18 March 2017 1:05 AM IST (Updated: 18 March 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மணிநகரில் கடந்த ஒரு மாதமாக பெண் ஒருவர், சித்தா–ஆயுர்வேத சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரியை நடத்தி வந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மணிநகரில் கடந்த ஒரு மாதமாக பெண் ஒருவர், சித்தா–ஆயுர்வேத சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரியை நடத்தி வந்தார். நேற்று அந்த ஆஸ்பத்திரியில் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் பானு, மாவட்ட சித்தா அலுவலர் கரிகால வல்லவராஜன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் உரிய மருத்துவ படிப்பை படிக்காமல் நோயாளிகளுக்கு, சித்தா–ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளித்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள், தூத்துக்குடி மத்தியபாகம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அந்த பெண் போலி டாக்டர் என தெரியவந்தது.


Next Story