பெரம்பலூரில் மறியல் போராட்டம் நடத்திய ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கைது


பெரம்பலூரில் மறியல் போராட்டம் நடத்திய ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கைது
x
தினத்தந்தி 18 March 2017 4:15 AM IST (Updated: 18 March 2017 1:25 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் மறியல் போராட்டம் நடத்திய ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்பட 126 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். அப்போது தேர்தல் பணிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். பதவி உயர்வு பெற்ற ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஊதியம் வழங்க வேண்டும்.

சாலை ஆய்வாளர்களுக்கு பணிபுரிந்த ஆண்டுகளை கணக்கில் கொண்டு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று 4–வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

126 பேர் கைது

பின்னர் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டான பகுதியில் சங்க மாவட்ட தலைவர் மரியதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட துணை தலைவர் தயாளன், மாவட்ட பொருளாளர் அறிவழகன் உள்பட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது கோரிக்கைகளை ஆதரித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினரும் மாவட்ட தலைவர் ஆளவந்தார் தலைமையில் அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 126 பேரை போலீசார் கைது செய்து ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story