நுண்ணீர் பாசன திட்டவயல்களில் கலெக்டர் சரவணவேல்ராஜ் ஆய்வு
பாரத பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படும் வயல்களை கலெக்டர் ஆய்வு.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், அருங்கால் கிராமத்தில் பாரத பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படும் கரும்பு, மக்காச்சோள வயல்களை கலெக்டர் சரவணவேல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது,
அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் அதிக அளவில் பயிர் சாகுபடி செய்திட தமிழ்நாடு அரசு பாரத பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டு நீர் முறையை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பெரு விவசாயிகள் முதல் சிறு, குறு விவசாயிகள் வரை பயன்பெற்று வருகின்றனர். இம்முறையை பயன்படுத்துவதால், விவசாயிகளின் பயிர்களுக்கு தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் சாகுபடி செய்யப்படும் விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையின் மூலமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
இந்த ஆய்வின் போது கலெக்டருடன், வேளாண்மை இணை இயக்குநர் சதானந்தம், துணை இயக்குனர் மனோகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) இளங்கோவன், உதவி இயக்குனர் (பொறுப்பு) சவீதா ஆகியோர் உடனிருந்தனர்.