மதுபான கடை திறக்க கூடாது என்று கூறி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
உப்பிடமங்கலம் பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை திறக்க கூடாது என்று கூறி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கரூர்,
கரூரை அடுத்த உப்பிடமங்கலம், சீத்தப்பட்டி, மாமரத்துப்பட்டி, கருப்பம்பாளையம், லிங்கத்தூர் ஆகிய பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து கலெக்டர் கோவிந்தராஜிடம் நேற்று ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
உப்பிடமங்கலம் பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை திறப்பதாக தெரிகிறது. இந்த பகுதியை சுற்றிலும் விவசாய நிலங்கள், குடியிருப்புகள் உள்ளன. மதுபான கடை திறக்க உள்ள இடத்தையொட்டியுள்ள சாலை வழியாகத்தான் பெண்கள், மாணவ– மாணவிகள் சென்று வருகின்றனர்.
திறக்க கூடாதுஎனவே இங்கு புதிதாக மதுபான கடை திறந்தால் சட்ட விரோத நடவடிக்கைகளும், சமூக விரோத செயல்களும் நடக்கும். எனவே உப்பிடமங்கலம் பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை திறக்க கூடாது. இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Next Story