திருவள்ளூர் அருகே திருட்டு வழக்கில் 3 பேர் பிடிபட்டனர்
திருவள்ளூர் அருகே திருட்டு வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு லட்சுமிவிலாஸ் வங்கி நகரை சேர்ந்தவர் மணி (வயது 58). இவர் சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் கடந்த 13–ந் தேதியன்று மணி தன்னுடைய மனைவி பவானியுடன் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த 2 பவுன் தங்கநகையும் வெள்ளிபொருட்களும் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
3 பேர் கைது
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெருமாள்பட்டு பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றி வந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை துரைப்பாக்கம் கண்ணகிநகரை சேர்ந்த செங்கா என்கிற தமிழ்வாணன் (30), நித்யா என்கிற நித்யானந்தம் (28), பூந்தமல்லியை அடுத்த பாப்பன்சத்திரத்தை சேர்ந்த நந்தகுமார் (32) என்பது தெரியவந்தது. அவர்கள் மணியின் வீட்டின் பூட்டை உடைத்து திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து 2 எல்.இ.டி. டி.வி.க்கள், ஒரு டி.வி.டி. பிளேயர், ½ கிலோ வெள்ளிபொருட்கள், ஒரு பவுன் தங்க நகையை போலீசார் கைப்பற்றினர்.
அவர்கள் 3 பேரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சென்னை ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 70 பவுன் தங்கநகைகளை கைப்பற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மேற்கண்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story