பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம்: மனைவி போலீசில் புகார் செய்ததால் வாலிபர் தற்கொலை


பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம்: மனைவி போலீசில் புகார் செய்ததால் வாலிபர் தற்கொலை
x

போலீசார் தேடுவதை அறிந்த வாலிபர் நேற்று முன்தினம் இரவு பட்டிபுலம் தர்கா அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாமல்லபுரம்,

அரக்கோணத்தை சேர்ந்தவர் 35 வயது வாலிபர். கட்டுமான வேலை செய்து வரும் இவர் மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலம் என்ற இடத்தில் மனைவி, 3 மகள்களுடன் வசித்து வந்தார். மனைவி வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி ஆவார். இவர்களின் 10 வயதுடைய 2-வது மகள் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் 2-வது மகள் தனியாக இருந்தபோது அவரை குடி போதையில் இருந்த அந்த வாலிபர் பெற்ற மகள் என்றும் பார்க்காமல் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் தனது முதல் மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தன்னுடைய கணவர் மீது புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

போலீசார் தேடுவதை அறிந்த அவர் நேற்று முன்தினம் இரவு பட்டிபுலம் தர்கா அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

Next Story