பெரம்பூரில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பெரம்பூரில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 March 2017 2:47 AM IST (Updated: 18 March 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.ஆர்.இ.எஸ்.–என்.எப்.ஐ.ஆர். ஆகிய ரெயில்வே தொழிற் சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பூர்,

சென்னை பெரம்பூர் லோகோ ரெயில்வே பணிமனை எதிரில் எஸ்.ஆர்.இ.எஸ்.–என்.எப்.ஐ.ஆர். ஆகிய ரெயில்வே தொழிற் சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரெயில்வே தொழிலாளர்களுக்கு குறைந்த மாத சம்பளமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்க பொதுச்செயலாளர் சூரியபிரகாசம் தலைமை தாங்கினார். இதில் 100–க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். 

Next Story