வியாசர்பாடியில் பிரபல ரவுடியின் தம்பியை வெட்டிய வழக்கில் 4 பேர் கைது


வியாசர்பாடியில் பிரபல ரவுடியின் தம்பியை வெட்டிய வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 18 March 2017 2:52 AM IST (Updated: 18 March 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், 59–வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 21). சாலையில் நடந்து சென்ற இவரை 3 பேர், அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர், 59–வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 21). சாலையில் நடந்து சென்ற இவரை 3 பேர், அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரபல ரவுடி பப்லுவின் தம்பியான ஏழுமலை மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதுபற்றி எம்.கே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை வெட்டிய மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வியாசர்பாடியை சேர்ந்த ஹரி(42), அவருடைய மகன் லாரன்ஸ் என்ற பிரபு(21), அவருடைய நண்பர்களான பிரவீன்(20,) ராகுல்(22) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக ஏழுமலையை வெட்டியதாக தெரிகிறது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story