எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்க முடிவு
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட இருப்பதாகவும், அதில் 15 பேர் இடம் பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் பணிக்குழு
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., ஓ.பன்னீர்செல்வம் அணியினர், தே.மு.தி.க., எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என 6 முனை போட்டி நடக்கிறது. மக்கள் நலக்கூட்டணி மட்டும் இதுவரை தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.
இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், தேர்தலுக்கான பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
இதற்காக ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பணிக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அதில் 15 பேர் இடம்பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமனம் செய்வது தொடர்பான ஆலோசனையும் நடைபெற்று வருகின்றன.
ஆதரவாளர்கள் அதிருப்தி
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் தேர்தல் பணிகள் நடைபெற்று வந்தாலும், ஜெ.தீபாவின் செயல்பாடுகள் சற்று ஏமாற்றத்தை தருவதாக ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு கூட வெகு நேரம் தாமதமாகவே அவர் வந்தார். இது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
நிர்வாகிகள் தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, ஆலோசனை கூட்டத்துக்கு குறைவான ஆட்களே முதலில் வந்ததால் அவர் தாமதமாக கூட்டத்துக்கு வந்ததாக தெரிவித்தனர். இதுமட்டுமில்லாமல் சில இடங்களில் ஆதரவாளர்கள் குறைந்து வருவதால் நிர்வாகிகளும் பின்வாங்குவதாக தகவல் வருகின்றன.
வெளிமாவட்டங்களில் இருந்து அவரை சந்திக்க வரும் நிர்வாகிகள் ஜெ.தீபாவுக்கு தங்கள் பகுதியில் அதிகளவில் ஆதரவு இருப்பதாகவே கூறப்படுகிறது. அவர்கள் அப்படி கூறினாலும், ஜெ.தீபா சுற்றுப்பயணம் செய்யும் போது தான் அங்குள்ள உண்மை நிலவரம் தெரியவரும்.

Next Story