தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி பாராட்டு
சட்டசபை தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
மும்பை,

பிரணாப் முகர்ஜி
மும்பையில் இந்தியா டுடே குழுமம் சார்பில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வழியாக பேசினார். அப்போது, உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பாரதீய ஜனதா பெற்ற வெற்றியை மேற்கோள் காட்டி மோடி பேசினார்.
இதைத்தொடர்ந்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசுகையில் கூறியதாவது:-
மகிழ்ச்சி
ஆலோசனையும், ஒருமித்த கருத்தும் தான் முன்னேறுவதற்கு எப்போதும் சிறந்த வழி. பாராளுமன்ற ஜனநாயகத்தில், பெரும்பான்மைக்கு எதிராக நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் முழு ஈடுபாட்டுடன் ஒட்டுமொத்த நாட்டையும் தங்களுடன் எடுத்து செல்ல வேண்டும்.
உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா பெற்ற மகத்தான வெற்றியை தொடர்ந்து, நமக்கு பணிவு தேவை என்று பிரதமர் மோடி கூறியதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
ஒருமித்த கருத்து
தேர்தல் தீர்ப்புகள் பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. அதேசமயம், மாநிலங்கள் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுகின்றன. இது தான் இந்தியாவின் உண்மையான பாரம்பரியம். பெரும்பான்மையான மக்கள் இதை தான் நடைமுறையில் காண விரும்புகிறார்கள்.
இவ்வாறு பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

Next Story