‘ஹைப்பர் லூப்’ போக்குவரத்துப் பணிகள் தொடக்கம்


‘ஹைப்பர் லூப்’ போக்குவரத்துப் பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 18 March 2017 8:00 PM IST (Updated: 18 March 2017 11:55 AM IST)
t-max-icont-min-icon

குழாய் வடிவ அமைப்புக்குள், அமர்ந்த நிலையில் அசுர வேகத்தில் பயணிப்பதுதான் ‘ஹைப்பர் லூப்’ போக்குவரத்து நுட்பம்.

இந்தப் புதிய தொழில்நுட்பம் குறித்த பல்வேறு செய்திகளை கடந்த காலங்களில் நீங்கள் படித்திருப்பீர்கள்.

இந்நிலையில், தற்போதுதான் உலகிலேயே முதல் முறையாக இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. அதை எடுத்துக்காட்டும் புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன.

அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள நெவாடா பாலைவனப் பகுதியில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மணிக்கு சுமார் 1,220 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கக்கூடிய இத்தொழில்நுட்பத்தை இந்த ஆண்டே பரீட்சித்து பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்போதைக்கு சுமார் 500 மீட்டர்கள் அளவுக்கு இதற்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது சுமார் 10 லட்சம் கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.

அடுத்த சில மாதங்களில் மூன்று கிலோ மீட்டர்கள் வரை இப்பாதையானது அமைக்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர், பயணிகளை ஏற்றாமல் தனியாக சோதனை முயற்சி மேற்கொள்ளப்படுமாம்.

நவீன தொழில்நுட்பம் வளர வளர, உலகம் மேலும் மேலும் சுருங்கிக்கொண்டே போகிறது!

Next Story