வான்வெளியில் ஒரு சுகமான உலா!
பூமிக்கு மேலே பல கிலோமீட்டர் உயரத்தில் மிதந்தபடி சூரிய அஸ்தமத்தைக் காணும் அருமையான அனுபவத்தை கற்பனை செய்து பாருங்கள்!
அந்த அனுபவத்தை வான்வெளிச் சுற்றுலாக்கள் வழங்குகின்றன. இனி எல்லோருமே இப்படி வானில் மிதக்கலாம், அற்புதமான காட்சிகளைக் கண்டு சிலிர்க்கலாம்.
அதற்கான வாய்ப்பை ‘வேல்ட் வியூ’ என்ற நிறுவனம் வழங்குகிறது. ‘வான்வெளிச் சுற்றுலா என்பது மறக்க முடியாத சுகானுபவமாக இருக்கவேண்டும் என்பது தங்களின் நோக்கம்’ என்கிறார், இந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி டேபெர் மெக்கல்லம்.
‘பூமிப்பரப்பில் இருந்து மெதுவாக மேலெழும்பி அழகழகான காட்சிகளை பொறுமையாக கண்டுகளித்து ரசித்தபடி மெல்ல மீண்டும் பூமிக்குத் திரும்பவேண்டும்’ என்று தங்கள் திட்டத்தை இவர் விவரிக் கிறார்.
இரண்டு மணிநேரம் மேலெழும் பயணத்துக்கு தற்போதைய கட்டணமாக 50 லட்ச ரூபாய் விதிக்கப்படுகிறது.
வான்வெளி உலா பயணக்கலன், மற்ற விண்வெளி விமானங்கள், ராக்கெட்கள் செல்லும் அதிக பட்ச உயரத்துக்கு பயணிக்கப்போவதில்லை.
‘ஆனால் இதில் பயணிப்பது, மற்றவற்றைவிட சாந்தமான, மனதையும் உடலையும் அமைதிப் படுத்தும் அற்புத அனுபவமாக அமையும்’ என் கிறார், டேபெர் மெக்கல்லம்.
‘ராக்கெட் பயணம் பிரமிப்பை ஏற்படுத்தலாம். சந்தேகமில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை வான்பயணம் என்பது இன்ப அனுபவமாக இருப்பது அவசியம். அருகில் நண்பரோடு, அமைதியாக அமர்ந்து, காட்சிகளை ரசித்தபடி விண்ணில் மிதப்பதே தனி அனுபவம்’ என்கிறார்.
இந்த நிறுவனத்தின் வான்வெளிப் பயணக் கலன், காற்றின் போக்கிலும், மாறும் உயரத்தைப் பொருத்தும் தன் பயணத்தை மேற்கொள்ளும்.
இதில் உள்ள பாராசூட் நாம் மெதுவாக மண்ணில் இறங்க உதவும்.

Next Story