இலவச சட்ட ஆலோசனை வழங்கும் ‘எந்திர வக்கீல்’
இங்கிலாந்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் உருவாக்கியிருக்கும் எந்திர வக்கீல், அகதிகளுக்கு இலவச சட்ட ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
ஜோஷ்வா பிரவுடர்
உண்மையில் அது ஒரு கணினி ‘ஆப்’தான். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் ஜோஷ்வா பிரவுடர் அந்த ‘ஆப்’பை உருவாக்கி, ‘டுநாட்பே’ என்று பெயரிட்டார். உலகின் முதலாவது எந்திர வக்கீல் என்றும் அதை அழைத்தார்.
உரையாடும் எந்திர கணினி ‘ஆப்’ ஆன இது, எழுத்து மற்றும் ஒலி வடிவங்களில் உரையாடலை மேற்கொள் கிறது.
பயனாளருக்கு அறிவுரை மற்றும் சட்ட விஷயங்களை வழங்குவதற்கு முன்னால் ஒரு வழக்கு பற்றிய தகவல்களைத் திரட்டிக்கொள்ள பேஸ்புக் மெசஞ்சரை இது பயன்படுத்திக்கொள்கிறது.
தொடக்கத்தில், வாகனங்களை நிறுத்த இடம் தேடுவோருக்கு உதவும்விதத்திலும், அல்லது அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட கூடுதல் வேகத்தில் வாகனத்தை ஓட்டி அதனால் அபராதம் செலுத்தும் நிலையில் இருந்து தப்பிக்கவும் இந்த ‘ஆப்’ வடிவமைக்கப்பட்டது.
இந்த ‘ஆப்’பை, தஞ்சம் கோரும்அகதிகள் பயன்படுத்தும் வகையில் பிரவுடர் மாற்றியமைத்திருக்கிறார்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் குடியேற்றம் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் அகதிகளுக்கு இந்த ‘ஆப்’ உதவுகிறது.
இங்கிலாந்தில், அரசிடம் இருந்து நிதியுதவி பெற்றுக்கொள்வதற்கும், தஞ்சக் கோரிக்கைகளுக்கும் இது உதவுகிறது. இந்த நாடுகளைச் சேர்ந்த வக்கீல்களின் உதவியுடன் இதற்கு ஏற்றவாறு குறிப்பிட்ட ‘ஆப்’பை பிரவுடர் வடிவமைத்திருக்கிறார்.
சர்வதேச சட்டப்படி தஞ்சக் கோரிக்கையை வைக்கும் அகதிகள் அதற்குத் தகுதியானவர்களா என்று தெரிந்துகொள்ள இந்த ‘ஆப்’ பல கேள்விகளை முன்வைக் கிறது.
இதனைப் பயன்படுத்தும் ஒருவர் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரியவந்தவுடன், நூற்றுக் கணக்கான விவரங்களுக்கு அவரை வழிநடத்திச் செல்வதுடன், குடியேற்றத்துக்கான விண்ணப்பத்தையும் தானே நிரப்பிவிடுகிறது.
இந்த உரையாடல் ‘ஆப்’ எழுப்பும் அனைத்துக் கேள்வி களும் ஆங்கிலத்தில் இருக்கின்றன. தனது செயற்கை நுண்ணறிவால் பல்வேறு விஷயங்களைக் கிரகித்து கேள்விகளை எழுப்புகிறது.
முக்கியமாக, புகலிடம் கோரும் அகதியானவர், அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகளை உருவாக்கும் வழிகளை இந்த ‘ஆப்’ பரிந்துரைக்கிறது.
சொந்த நாடு துறந்து இலக்கின்றி அலையும் அகதிகளுக்கு இந்த ‘ஆப்’ ஓர் ஆறுதல்தான்!

Next Story