பொது இட ‘வை-பை’யை பயன்படுத்தினால்...


பொது இட ‘வை-பை’யை பயன்படுத்தினால்...
x
தினத்தந்தி 18 March 2017 6:45 PM IST (Updated: 18 March 2017 12:49 PM IST)
t-max-icont-min-icon

நம்மில் பலரும், பொது இடங்களில் ‘வை-பை’ (WiFi) வசதி கிடைக்கிறதா என்று ஆர்வத்துடன் பார்க்கிறோம், அது கிடைத்தால் சந்தோஷத்துடன் பயன்படுத்தத் தொடங்குகிறோம்.

ஆனால் பொது ‘வை-பை’ வசதியைப் பயன்படுத்துவதில் கொஞ்சம் கவனம் வேண்டும்.

காரணம், பொது இடங்களில் கிடைக்கும் ‘வை-பை’யை பயன்படுத்தும்போது தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

இதனால் நமது செல்போனில் உள்ள படங்கள், வங்கிக் கணக்குகளின் தகவல்களை எளிதாக ஹேக்கர்கள் திருடிவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
பொது இடங்களில் நாம் பயன்படுத்தும் ‘வை-பை’ பாதுகாப்பானது என்றால் அதில் ‘பாஸ்வேர்டு’ போன்ற தகவல்கள் கேட்கப்படும்.

‘பாஸ்வேர்டு’ பயன்படுத்தும்போது செய்திகள், பாதுகாப்பான மறைக்கப்பட்ட (Encrypted) தகவல்களாக இருக்கும்.

WPA அல்லது WPA2 Password கேட்கவில்லை என்றால், பாதுகாப்பில்லை என்று அர்த்தம்.

நாம் பயன்படுத்தும் இணையதளங்கள் பாதுகாப்பானதாக இருந்தால் அதன் முகவரியில் (URL Address) https எனக் காட்டும்.

அதற்கு நாம் பயன்படுத்தும் செல்போனை சரியான கால இடைவெளிகளில் அப்டேட் செய்ய வேண்டும். அதன் மூலம், தகவல்களைத் திருடுவது கடினமாகும்.

பொது இடங்களில் ஆன்லைன் பணப் பரிமாற்றம் செய்வதைத் தவிர்ப்பதன் மூலம் வங்கிக் கணக்குகள் திருடப்படுவதைத் தடுக்கலாம்.

பொது இடங்களில் வை-பை பயன்படுத்த வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டால் VPN (Virtual Private Network)
இணைப்பைப் பயன்படுத்தலாம். அதன் மூலம் நம்முடைய தகவல்கள் Encry ption செய்யப்பட்டு பாதுகாக்கப்படும்.
பொது ‘வை-பை’யை தேவையற்றபோது தவிர்க்கலாம். ஒருவேளை நீங்கள் பொது ‘வை-பை’யில் இணைந்தால் உங்கள் போனில் ‘லாக்அவுட்’ செய்யப்படாமல் வைத்திருக்கும் மின்னஞ்சல், பேஸ்புக், டுவிட்டர் கணக்குகளில் இருந்து தகவல்கள் திருடப்படலாம் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருங்கள்.


Next Story