மழை மேகங்களை தேடி பறக்கும் விமானிகள் ...!


மழை மேகங்களை தேடி பறக்கும்   விமானிகள் ...!
x
தினத்தந்தி 18 March 2017 4:07 PM IST (Updated: 18 March 2017 4:07 PM IST)
t-max-icont-min-icon

‘‘எல்லா விமானிகளும் புயல், அடர்த்தியான மேகக்கூட்டம், சூறாவளி ஆகியவற்றை தவிர்த்துவிட்டு ஒதுங்கி செல்ல நினைப்பார்கள்.

‘‘எல்லா விமானிகளும் புயல், அடர்த்தியான மேகக்கூட்டம், சூறாவளி ஆகியவற்றை தவிர்த்துவிட்டு ஒதுங்கி செல்ல நினைப்பார்கள். ஆனால் நானும் என்னுடைய நண்பர்களும்... புயல், சூறாவளியின் மையத்தை நோக்கி பறக்கிறோம். இடையூறு இல்லாமல் பறப்பதை விட... புயல் மேகங்களில் புகுந்து, பதற்றம் மிகுந்த திகிலுடன் பறப்பதே சுவாரசியமாக இருக்கிறது’’ என்று பேசுகிறார், பைரன் பெடர்சன்.

‘கிங் ஏர் பி–200’ ரக புரோபலர் ஜெட் விமானத்தில் பறந்துக்கொண்டிருக்கும் பைரன், மகாராஷ்டிரா மாநிலத்தின் ‘ரைன் கேப்டன்’. மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மேல் மிதந்துக்கொண்டிருக்கும் மேகங்கள், எந்த இடத்தில் மழை மேகமாக மாறவேண்டும் என்பதை தீர்மானிப்பதும் இவரே. ஆம்.., ‘மேக விதைப்பு’ என்ற அறிவியல் திட்டத்தின்படி நினைத்த இடங்களில் எல்லாம், மழை மொழிய வைப்பதில் இவர் கில்லாடி.

‘‘அது ஒன்றும் பெரிய வித்தை இல்லை. மழை மேகங்களுக்கு மேலே பறந்து சென்று ரசாயன கரைசலை தெளித்துவிட்டால் நினைத்த இடத்தில், வேண்டிய அளவு மழையை பெற முடியும். இதை செயல் முறைப்படுத்த உலக நாடுகளே தயங்கிய நிலையில் மகாராஷ்ரா அரசு தைரியமாக முன்வந்து மேக விதைப்பின் மூலம் கூடுதல் மழையில் நனைத்து மகிழ்கிறது’’ என்று மெதுவாக ‘டேக் ஆப்’ ஆகிறார், பைரன். கர்நாடக மாநிலத்தை அடிப்படையாக கொண்ட விமான நிறுவனத்தில் பணியாற்றும் பைரனுக்கு மேக கூட்டங்களுக்கு இடையே பறப்பது தான் பிரதான வேலை.

‘‘என்னுடன் பிரகாஷ் என்பவரும் பறக் கிறார். மேக கூட்டங்களை கண்காணிப் பதும், வானிலையை ஆராய்வதுமே அவருடைய முதன்மை பணி. மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தின் நிலவியல் அமைப்பை ஆராய்ந்து வயல்வெளி, அணைக்கட்டுகள், குளம்–குட்டைகளில் மழையை கொண்டு சேர்க்க உதவுகிறார். நகரங் களில் மழை பொழிவதை விட கிராமங்களில் பொழிந்தால் விளைநிலமும் குளிரும்; விவசாயிகளின் மனமும் குளிரும். அதனால் மேக கூட்டங்களை கண்காணித்து விவசாய நிலங்களில் மழை பொழியும் வகையில் ரசாயன கரைசலை மேகங்களில் தெளித்து விடுகிறோம்’’ என்று கூறும் பைரன்.... மேகவிதைப்பின் கூடுதல் தகவல்களை பிரகாஷிடம் கேட்க சொல்கிறார்.கேப்டனின் பேச்சை மறுக்காமல் பிரகாஷூம் சொல்கிறார்...

‘‘கார்பன் டை ஆக்ஸைடு முறை (உலர் பனிக்கட்டி முறை),சில்வர் அயோடைடு முறை... என இரு முறைகளில் மேகங்களை கரைக்கிறோம். இன்னும் சில நாடுகளில் உப்பு நீர் கரைசல், சோடியம் கரைசல் ஆகியவை மேகங் களை கரைத்து மழை பொழிய மூல காரணிகளாக இருக் கின்றன. விமானத்தின் அலுங்கல் குலுங் கல்களை விமானி பொறுத்து கொள்ளலாம். ஆனால் ஆராய்ச்சியாளரால் எப்படி பொறுத்து கொள்ள முடியும். பேய் மழை பெய்தாலும் விமானத்தில் என்னை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுவிடுவார்.  

இடி, மின்னல், பேய் காற்றை... வீட்டு ஜன்னல் வழியாக பார்த்து ரசித்தவற்றை நேருக்கு நேராக சந்திக்க வைத்துவிட்டார் என்று நகைச்சுவையாக பேசும் பிரகாஷ், வானிலை சார்ந்த ஆராய்ச்சி படிப்புகளுடன், விமான பயிற்சிகளையும் எடுத்து கொள்கிறார்.

‘‘மகாராஷ்டிராவிற்கு இயற்கையாகவே 15 சதவிகித மழை பொழிவு இருந்தால், நாங்கள் கூடுதலாக 10 சதவிகித மழை பொழிவை உருவாக்குகிறோம். படிப்பதற்கும், கேட்பதற்கும் இது எளிதாக இருந்தாலும் உயிருக்கு பயந்து தான் பறக்கிறோம். புயல் மேகங்களில் பறப்பதை விட... பருவமழை மேகங்களில் பறப்பது எளிது. புயல் மேகங்கள் விமானங்களை சுக்கு நூறாக நொறுக்கிவிடும். சிலசமயங்களில் மின்னல் ஒளி கீற்று விமானங்களை பிளந்துவிடும். இவ்வளவு சவால்கள் இருந்தாலும், சாகச போதை தினம், தினம் ஆபத்தை நோக்கி பறக்க வைக்கிறது’’ என்று கூறும் பைரன், உயிர் உள்ளவரை மேகங்களுக்கு நடுவே பறந்துக்கொண்டே இருக்க ஆசைப்படுகிறார்.

துபாய், அமெரிக்கா... என ஒருசில வளர்ந்த நாடுகளில் மட்டுமே நடைமுறையில் இருக்கும் மேக விதைப்பை மகாராஷ்டிர மாநிலமும் பயன்படுத்துவது பெருமைப்பட கூடிய வி‌ஷயமே. இதுபோன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை விவசாயத்திற்கு பயன்படுத்தினால் நிச்சயம் தமிழ்நாட்டையும் பசுஞ்சோலைவனமாக மாற்ற முடியும்.


Next Story