கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்த 15 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் கலெக்டர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்த விரும்புபவர்கள் 15 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
எருது விடும் விழா
எருது விடும் விழா அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஊர்களில் மட்டுமே நடத்த அனுமதிக்க முடியும். விழா நடத்த அனுமதி கேட்கும் விண்ணப்பத்தின் மீது உதவி கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, தாசில்தார், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழுவினர் தணிக்கை செய்து பரிந்துரை செய்த பிறகே அனுமதி அளிக்கப்படும்.
எருது விடும் விழா கலாசார ரீதியாக மட்டுமே பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடத்த வேண்டும். பரிசுக்காக நடத்தப்படும் எருது விடுதல் போன்ற நிகழ்ச்சிக்கு அனுமதி கிடையாது. அவ்வாறு நடத்தினால் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அரசு விதிகளின்படி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எருது விடும் விழா நடத்த வேண்டும்.
அசாதாரணமான சூழ்நிலைஅசாதாரணமான சூழ்நிலை நிலவும் பட்சத்தில் காவல் துறையினரோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறும்பட்சத்தில் எருது விடும் விழாவை நிறுத்தி விட வேண்டும். எருது விடும் விழா நடத்தும்போது பார்வையாளர்கள் அடிபட்டாலோ அல்லது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்றாலோ உடனடியாக எருது விடும் விழா நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.