குண்ணத்தூர் அரசு பள்ளியில் 119 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்


குண்ணத்தூர் அரசு பள்ளியில் 119 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்
x
தினத்தந்தி 19 March 2017 1:45 AM IST (Updated: 18 March 2017 7:49 PM IST)
t-max-icont-min-icon

குண்ணத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

ஆரணி

ஆரணியை அடுத்த குண்ணத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிளஸ்–1 படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வக்கீல் கே.சங்கர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் புகழேந்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு 119 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினர்.

விழாவில் மாவட்ட துணை செயலாளர் டி.கருணாகரன், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் கஜேந்திரன், ஜெயலலிதா பேரவை நிர்வாகி பாரி பி.பாபு மற்றும் அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story