பஞ்சாலையில் சம்பள உயர்வு கேட்டு வாயில் கருப்பு துணி கட்டி தொழிலாளர்கள் போராட்டம்
சேவூர் பகுதியில் உள்ள ஒரு பஞ்சாலையில் சம்பள உயர்வு கேட்டு தொழிலாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டி நேற்று 3–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரணி,
ஆரணியை அடுத்த சேவூர் பகுதியில் உள்ள ஒரு பஞ்சாலையில் சம்பள உயர்வு கேட்டு தொழிலாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டி நேற்று 3–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் பஞ்சாலைஆரணியை அடுத்த சேவூர் பி.ஆர்.நகர் பகுதியில் தனியார் பஞ்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைபார்க்கின்றனர். இவர்கள் 3 ஷிப்டுகளாக பணியாற்றுகின்றனர். தொழிலாளர்கள் தங்களுக்கு சம்பள உயர்வு அளிக்கும்படி கேட்டு வந்தனர். ஆனால் பஞ்சாலை நிர்வாகம் சம்பளத்தை உயர்த்தாமல் இருந்தது.
இதனையடுத்து சம்பள உயர்வு உள்ளிட்ட 5 அமச் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3–வது நாளாக போராட்டம் நீடித்தது.
குடும்பத்துடன் போராட திட்டம்தொழிலாளர்களின் உள்ளிருப்பு போராட்டம் குறித்து நிர்வாகத்தினர் இதுவரை பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இது குறித்து தொழிலாளர் அமைப்பின் தலைவர்கள் ஜி.வெங்கடேசன், வி.வெங்கடேசன் மற்றும் செயலாளர் வி.யுவராஜ் உள்பட நிர்வாகிகள் ‘‘இந்த போராட்டத்தில் தினமும் 3 ஷிப்ட் தொழிலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் 19–ந் தேதி (இன்று) குடும்பத்துடன் போராட்டம் நடத்த உள்ளோம்’’ என்றனர்.