நாகர்கோவில் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்


நாகர்கோவில் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 19 March 2017 4:30 AM IST (Updated: 18 March 2017 11:13 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

நாகர்கோவில்,

ஏப்ரல் 2017 தேர்வுக்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள ஆன்லைன் பதிவு முறையை நிறுத்த கோரியும், நடப்பில் உள்ள விதிப்படி தேர்வு கட்டணங்கள் வசூலிக்க வலியுறுத்தியும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வுத்தாள் திருத்தும் பணி மைய மதிப்பீட்டு முறையில் நடத்தக் கோரியும், தமிழ்நாடு உயர்கல்வி மாமன்றம் அறிவித்த தேர்வுத்தாள் திருத்தும் ஊதியத்தை பல்கலைக்கழகம் அமல்படுத்த வலியுறுத்தியும், பல்கலைக்கழக ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பான புகார்கள் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கேட்டும் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள பயோனியர் குமாரசாமி கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ–மாணவிகள் நேற்று கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

 போராட்டத்தில் பங்கேற்ற பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். இந்த போராட்டம் மாலை வரை நடந்தது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் இந்து கல்லூரியிலும் பேராசிரியர்கள் மற்றும் மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story