தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல்


தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல்
x
தினத்தந்தி 19 March 2017 2:15 AM IST (Updated: 19 March 2017 12:26 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடை

தூத்துக்குடியில் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டு, மாற்று இடங்களில் அந்த கடைகளை அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் நேற்று முன்தினம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று காலையில் தூத்துக்குடி- மடத்தூர் மெயின் ரோட்டில் முருகேசன்நகர் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அந்த பகுதியில் டாஸ்மாக் கடை கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகரன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story