பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம் நடைபெற்றது.
பண்ருட்டி,
கருடசேவை
பண்ருட்டியில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் கருடசேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று முன்தினம் கருடசேவை உள்சவம் நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணிக்கு வரதராஜபெருமாளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன், விபூதி உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பிற்பகல் 3 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. இதையடுத்து மாலை 4.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் வரதராஜபெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளினார்.
இதில் பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.