தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை வகிக்கிறது ‘இஸ்ரோ’ தலைவர் கிரண்குமார் பேச்சு
தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை வகிப்பதாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் பேசினார்.
சிக்கமகளூரு,
தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை வகிப்பதாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் பேசினார்.
பயிற்சி முகாம்சிக்கமகளூரு டவுன் குவெம்பு கலையரங்கில் மாவட்ட நிர்வாகம், இளைஞர்கள் நலத்துறை சார்பில் டெல்லியில் நடைபெறும் மாநில அளவிலான இளைஞர் எழுச்சி மாநாட்டுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (‘இஸ்ரோ‘) தலைவர் கிரண்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் சத்தியவதி, மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி ராகப்பிரியா, போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இஸ்ரோ தயாராக உள்ளதுஇந்த முகாமில் ‘இஸ்ரோ‘ தலைவர் கிரண்குமார் பேசியதாவது:–
தற்போது 4 டன் எடை கொண்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டு விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளன. அடுத்ததாக இதைபோன்று 4 டன் எடைகொண்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் நடந்து வருகிறது.
இதனை தொடர்ந்து 5 டன் எடை கொண்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை விண்ணில் செலுத்தவும் ‘இஸ்ரோ‘ தயார் நிலையில் உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் நடந்து வரும் பணிகள் முடிந்து விண்ணில் செலுத்தப்படும் 4 டன் எடை கொண்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மாநில, மத்திய அரசுக்கும், விவசாயம் மற்றும் பல்வேறு துறைகளுக்கும் உதவும் வண்ணம் இருக்கும்.
இந்தியா முன்னிலை வகிக்கிறதுஇந்தியா தற்போது பல்வேறு தொழில்நுட்பத்தில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.