பா.ஜனதா தலைவர்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தாதது ஏன்? முதல்–மந்திரி சித்தராமையா கேள்வி


பா.ஜனதா தலைவர்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தாதது ஏன்? முதல்–மந்திரி சித்தராமையா கேள்வி
x
தினத்தந்தி 19 March 2017 2:00 AM IST (Updated: 19 March 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தாதது ஏன்? என்று முதல்–மந்திரி சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூரு,

பா.ஜனதா தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தாதது ஏன்? என்று முதல்–மந்திரி சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

மந்திரிகள் வீடுகளில் சோதனை?

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவிந்தராஜ் எம்.எல்.சி. வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையின் போது குறிப்பேடு (டைரி) சிக்கியதாகவும், அதில் கர்நாடக மந்திரிகள் காங்கிரஸ் கட்சி மேலிடத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்திருப்பது பற்றி குறிப்பிடப்பட்டு இருப்பதாக பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா குற்றச்சாட்டு கூறி வருகிறார்.

மேலும் அந்த குறிப்பேட்டில் உள்ள சில தகவல்களின்படி மந்திரிகள் டி.கே.சிவக்குமார், ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முதல்–மந்திரி சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

– கண்டிக்கத்தக்கது

மந்திரிகள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த இருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் காங்கிரஸ் கட்சியினரை குறி வைத்தே வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சோதனை நடத்தப்படுகிறது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் வீடுகளில் மட்டுமே வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகிறார்கள்.

பா.ஜனதா தலைவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தாதது ஏன்?. பா.ஜனதா தலைவர்கள் எந்த தவறும் செய்யவில்லையா?. அவர்கள் வருமான வரியை சரியாக செலுத்துகிறார்களா?. காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் மட்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கண்டிக்கத்தக்கதாகும்.

இவ்வாறு முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.


Next Story