முதல்–மந்திரியின் சொந்த மாவட்டமான மைசூருவில் எந்த வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை ஷோபா எம்.பி. குற்றச்சாட்டு


முதல்–மந்திரியின் சொந்த மாவட்டமான மைசூருவில் எந்த வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை ஷோபா எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 March 2017 2:06 AM IST (Updated: 19 March 2017 2:06 AM IST)
t-max-icont-min-icon

மைசூருவில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் சிக்கமகளூரு–உடுப்பி தொகுதி பா.ஜனதா எம்.பி. ஷோபா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

மைசூரு,

மைசூருவில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் சிக்கமகளூரு–உடுப்பி தொகுதி பா.ஜனதா எம்.பி. ஷோபா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்த போது நான் மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரியாக இருந்தேன். அப்போது மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நான் பாடுபட்டு வந்தேன்.

மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுத்தேன். ஆனால் தற்போது மைசூருவில் எந்த வளர்ச்சி பணிகளும் நடந்த மாதிரி தெரியவில்லை. முதல்–மந்திரி சித்தராமையாவின் சொந்த மாவட்டமான மைசூருவில் எந்த வளர்ச்சி பணிகளும் கடந்த 4 ஆண்டாக நடக்கவில்லை. அடுத்த மாதம்(ஏப்ரல்) 9–ந் தேதி நடக்க உள்ள நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story