பராமரிப்பு பணி காரணமாக கன்னியாகுமரி– மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்கள் ஆலப்புழை மாற்று வழியாக இயக்கம்
திருவல்லா– சங்கனாச்சேரி இடையே 2 நாட்கள் பராமரிப்பு பணி கன்னியாகுமரி– மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்கள் ஆலப்புழை வழியாக இயக்கம் தென்னக ரெயில்வே அறிவிப்பு
திருவனந்தபுரம்
திருவல்லா– சங்கனாச்சேரி இடையேயான இரட்டை ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி கன்னியாகுமரி– மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்கள் ஆலப்புழை வழியாக இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது.
ரெயில் பாதை பராமரிப்பு பணி குறித்து தென்னக ரெயில்வேயின் திருவனந்தபுரம் மண்டல அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
பராமரிப்பு பணிதிருவல்லா– சங்கனாச்சேரி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு ரெயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, கன்னியாகுமரி– மும்பை எக்ஸ்பிரஸ் எண் 16382, கண்ணூர்– திருவனந்தபுரம் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் எண் 12081, டெல்லி– திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் எண் 12626 ஆகிய 3 ரெயில்கள் ஆலப்புழை வழியாக இயக்கப்படும். 20, 21 ஆகிய 2 நாட்களுக்கு இந்த வழியாக ரெயில் இயக்கப்படும்.
ரெயில் எண் 56394 கொல்லம் –கோட்டயம் பயணிகள் ரெயில், ரெயில் எண் 56393 கோட்டயம்– கொல்லம் பயணிகள் ரெயில், ரெயில் எண் 56381 எர்ணாகுளம்– காயங்குளம் பயணிகள் ரெயில் மற்றும் ரெயில் எண் 56382 காயங்குளம்– எர்ணாகுளம் பயணிகள் ரெயில் ஆகியவை 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
ரெயில் எண் 56365 குருவாயூர்–புனலூர் பயணிகள் ரெயில், கோட்டயம்– புனலூர் வரையிலும், ரெயில் எண் 56366 புனலூர்– குருவாயூர் பயணிகள் ரெயில் புனலூர்– கோட்டயம் வரையிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.