சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து விழிப்புணர்வு கூட்டம்


சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 19 March 2017 2:17 AM IST (Updated: 19 March 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து விழிப்புணர்வு கூட்டம்- ஊர்வலம்

க.பரமத்தி,

க.பரமத்தி அருகே உள்ள கார்வழி அரசு தொடக்கப்பள்ளியில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு க.பரமத்தி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இயற்கை சுற்றுச்சூழல் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன் வரவேற்றார். கூட்டத்தில் சீமை கருவேல மரங்களை அடியோடு அகற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஊர்வலம் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகள் சீமை கருவேல மரங்களின் தீமைகள் பற்றிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர். இதில் ஆசிரிய- ஆசிரியைகள் கலந்து கொண்டனர். 

Next Story