கரூரில் அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்

கரூர்,
கரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலைசெய்கின்றனர். தற்போது அட்டைப்பெட்டி தயாரிக்க பயன்படும் கச்சா பொருட்கள் விலை டன்னுக்கு ரூ.6 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. எனவே இந்த விலையேற்றத்தை குறைக்க கோரி கரூரில் அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினர். இந்த வேலை நிறுத்தத்தால் 100 டன் மதிப்புள்ள அட்டைப்பெட்டி உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது.

Next Story