பெரம்பலூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து பெரம்பலூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
வன் கொடுமை சம்பவங்களை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி யினர் பெரம்பலூர் காந்தி சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் காமராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கருணாநிதி, வட்ட செயலாளர் ராஜாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் சின்னதுரை ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
கோரிக்கைகளை விளக்கி மக்கள் மருத்துவ கழக மாநில செயலாளர் டாக்டர் கருணாகரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ், மாவட்ட தலைவர் செல்லதுரை ஆகியோர் பேசினர்.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை
ஆர்ப்பாட்டத்தில், புதுடெல்லியில் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் ரோஹித் வெமுலா, முத்துகிருஷ்ணன் மர்ம சாவுக்கு கண்டனம் தெரிவித்தும், உயர்கல்வி நிலையங்களில் சாதிபாகுபாடுகளை களைய சட்டம் இயற்ற வேண்டும், அரியலூரில் சிறுமி பாலியல் படுகொலைக்கு ஆளான சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் வக்கீல் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story