ரூ.33½ கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்


ரூ.33½ கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணி அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 March 2017 4:15 AM IST (Updated: 19 March 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி பேரூராட்சியில் ரூ.33½ கோடியில் பாதாள சாக்கடை திட்ட பணி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் ரூ.33 கோடியே 51 லட்சம் மதிப்பில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்ட பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு, பாதாள சாக்கடை திட்ட பணியை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறிகையில், வேளாங்கண்ணி பேரூராட்சியில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்ட பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார். இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், நிர்வாக பொறியாளர் (பாதாள சாக்கடை திட்டம்) மாணிக்கம், உதவி நிர்வாக பொறியாளர்கள் செல்வம், பழனிசாமி, இளநிலை பொறியாளர்கள் விஜயகுமார், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Next Story