சவுரிராஜ பெருமாள் கோவில் தெப்ப உற்சவம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


சவுரிராஜ பெருமாள் கோவில் தெப்ப உற்சவம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 19 March 2017 4:00 AM IST (Updated: 19 March 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் மாசிமக திருவிழா கடந்த 4-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. அதைதொடர்ந்து சுவாமி தங்கப் பல்லக்கு, வெள்ளி அனுமார் வாகனம், வெள்ளி யானை வாகனம் ஆகியவற்றில் வீதி உலாவும், தங்க கருட சேவை, இரவு சூரிய, சந்திர பிரபை ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தெப்ப உற்சவம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சமுத்திர தீர்த்தவாரி நிகழ்ச்சி கடந்த 12-ந்தேதி நடைபெற்றது. அதைதொடர்ந்து நேற்று முன்தினம் காலை விடையாற்றி திருமஞ்சனமும், இரவு தெப்ப உற்சவமும் நடந்தது. முன்னதாக சாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினார். பின்னர் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் தஞ்சை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, முன்னாள் அறங்காவல் குழுத் தலைவர் ராதாகிருட்டிணன், அறங்காவலர் சந்திரகலாகிருஷ்ணமூர்த்தி, கோவில் செயல் அலுவலர் கிருஷ்ண குமார், தக்கார் ராணி மற்றும் கோவில் ஊழியர்கள், உபயதாரர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story