பிளஸ்-2 மாணவருக்கு கத்திக்குத்து முன்விரோதத்தில் சக மாணவர் வெறிச்செயல்
ஆலங்குடி அருகே அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது. முன்விரோதத்தில் வெறிச்செயலில் ஈடுபட்ட சக மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், தெற்குராயப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துக்கருப்பன். இவருடைய மகன் முத்துக்குமார்(வயது 16). ஆலங்குடி அருகே உள்ள மாஞ்சான்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருக்கும், அதே பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் சக மாணவர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இதனால் இவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு பள்ளியிலேயே மோதிக்கொள்வார்கள். தற்போது பிளஸ் -2 தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பாடத்தில் ஏற்பட்ட சந்தேகம் குறித்து கேட்பதற்காக மாஞ்சான் விடுதி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர் முத்துக்குமார் நேற்று காலை வந்தார். அப்போது அவருடன் தகராறில் ஈடுபட்டு வரும் சக மாணவரும் அங்கு வந்தார். பள்ளி வளாகத்தில் நின்று கொண்டிருந்தபோது, முத்துக்குமாருக்கும் சக மாணவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
கத்திக்குத்து
இதில் ஆத்திரமடைந்த சக மாணவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், முத்துக்குமாரின் கை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தினார். இதனால் மாணவர் முத்துக்குமார் அய்யோ, அம்மா என்று அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வகுப்பறையில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் கத்தியால் குத்திய மாணவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மாணவர் முத்துக்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் இதுகுறித்து ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி போலீசார் கத்திக்குத்து காயமடைந்த முத்துக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சக மாணவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story