ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டம்
கும்பகோணத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்தும், ஓய்வூதிய தொகையை நிலுவையின்றி உடனடியாக வழங்கக்கோரியும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் கும்பகோணம் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 16-ந் தேதி மண் சட்டியை கையில் ஏந்தி பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றுமுன்தினம் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 3-வது நாளான நேற்று ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மேலாடையின்றி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நடந்த போராட்டத்துக்கு தற்போது போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டம் குறித்து ஓய்வு பெற்றோர் நலச்சங்க கூட்டமைப்பின் நிர்வாகி முத்துக்குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
3-வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அரசும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் எங்களை கண்டு கொள்வதாக இல்லை. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வலுவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டம் காரணமாக கும்பகோணம் போக்குவரத்துக்கழக பணிமனைக்குள் நேற்று பஸ்களை கொண்டு செல்ல முடியவில்லை. மேம்பாலம், சேய்குளம், செக்காங்கன்னி, நால்ரோடு உள்ளிட்ட இடங்களில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அதிகாலையில் ஆர்ப்பாட்டம்
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் கும்பகோணம் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலக வாசலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்துக்கு செல்வராஜ் தலைமை தாங்கினார்.
இதேபோல் போக்குவரத்து அலுவலகத்தின் மற்றொரு கிளையிலும் அதிகாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கிளை தலைவா் கோவிந்தராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story