பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் கூட்டத்தில் வலியுறுத்தல்
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூர்,
திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜோன்ஸ்ஜன்ஸ்டீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஈவேரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணை செயலாளரும், திருவாரூர் மாவட்ட செயலாளருமான மதிவாணன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஆர்ப்பாட்டம்
முத்துப்பேட்டை ஒன்றியம் உப்பூர் அரசு உதவி பெறும் பள்ளிக்கு பணி நிரவல் செய்யப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே விதிமுறைகளுக்கு உட்பட்டு பணி நிரவல் செய்ய வேண்டும். இல்லையென்றால் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும். ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 5 கட்ட போராட்டங்கள் நடத்துவது. அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ந் தேதி வட்டார தலை நகரங்களில் கோரிக்கைகளை விளக்கி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் வட்டார செயலாளர்கள் அய்யப்பன், வேதரத்தினம், பாரதிமோகன், சிவக்குமார், அமிர்தராஜ், தமிழரசன், மன்னார்குடி நகர செயலாளர் மார்ட்டின்வஜ்ரசிங், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயசீலன், சுபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story