மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் கூட்டத்தில் வலியுறுத்தல்


மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 March 2017 4:15 AM IST (Updated: 19 March 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று தஞ்சையில் நடந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் முன்னேற்ற சங்க அனைத்து பணியாளர்கள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வாகலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெரியசாமி வரவேற்றார். ரவி, செல்லத்துரை, ராஜேந்திரன், பரமசிவம், முருகானந்தம், சங்கர், கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில தலைவர் தனமதிவாணன், பொதுச்செயலாளர் ராஜேந்திரன், துணை செயலாளர் திப்புகருப்புசாமி, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ரெங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

பணி வழங்க வேண்டும்


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

மக்கள் நலப்பணியாளர்களுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டை வாபஸ் பெற்றுக்கொண்டு மீண்டும் பணி வழங்க மாநில அரசை வலியுறுத்துவது. வருகிற ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையின் போது சென்னையில் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப்போராட்டம் நடத்த மாநில சங்கத்தை கேட்டுக்கொள்வது.

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்ட நீதிபதி சுகுணா மற்றும் ஈரோடு மாவட்ட மக்கள் நலப்பணியாளர் முன்னேற்ற சங்க தலைவர் மோகனசுந்தரம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் மாவட்ட பொருளாளர் கரும்பாயிரம் நன்றி கூறினார்.


Next Story