மண்ணிவாக்கம், மயிலாப்பூரில் அம்மா திட்ட முகாம்


மண்ணிவாக்கம், மயிலாப்பூரில் அம்மா திட்ட முகாம்
x
தினத்தந்தி 19 March 2017 2:31 AM IST (Updated: 19 March 2017 2:31 AM IST)
t-max-icont-min-icon

மண்ணிவாக்கம், மயிலாப்பூரில் அம்மா திட்ட முகாம் நடந்தது.

வண்டலூர்,

தமிழக அரசின் உத்தரவுப்படி மண்ணிவாக்கம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு கிராம நிர்வாக அதிகாரி ருக்மாங்கதன் தலைமை தாங்கினார்.  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.டி.லோகநாதன், அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் துளசிங்கம், வருவாய் ஆய்வாளர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தாசில்தார் இப்ராஹிம், செங்கல்பட்டு சமூக நலத்துறை தனி தாசில்தார் பாக்கியலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டனர்.

முகாமில் பல்வேறு கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. இதில் செங்கல்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் பூங்கொடி, ஊராட்சி செயலர் ராமபக்தன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மயிலாப்பூர்

ஊத்துக்கோட்டையை அடுத்த பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட மயிலாப்பூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடந்தது. துணை தாசில்தார் கதிர்வேல் தலைமை தாங்கினார். துயர் துடைப்பு தாசில்தார் லதா, வட்ட வழங்கல் அலுவலர் பிரீத்தி, வருவாய் ஆய்வாளர் ரமணி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்ட 51 பேர் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

 முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள் மகாராஜன், நந்தகோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உத்திரமேரூர்

    உத்திரமேரூர் தாலுகா திருப்புலிவனம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது. முகாமில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர், உத்திரமேரூர் தாசில்தார் ராஜம்மாள் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். முகாமில் வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, ரே‌ஷன்கார்டு வேண்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 38 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

 இந்த முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் லோகநாதன், வருவாய் ஆய்வாளர் மணிமேகலை, கிராம நிர்வாக அதிகாரி ஜாஸ்மின் அன்சல்டா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

திருப்பாலைவனம்

மீஞ்சூரை அடுத்த திருப்பாலைவனம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு பொன்னேரி தாசில்தார் ஐவண்ணன் தலைமை தாங்கினார். தனிதாசில்தார் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் நடராஜன் அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 109 கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது.

 இதில்  73 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டது. இந்த முகாமில் கிராம நிர்வாக அதிகாரிகள் கயல்விழி, தினேஷ், தேவநாதன், சாந்தி, விக்னேஷ், சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story