சுடுகாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் மாநகராட்சி கமி‌ஷனரிடம் மனு


சுடுகாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் மாநகராட்சி கமி‌ஷனரிடம் மனு
x
தினத்தந்தி 19 March 2017 2:54 AM IST (Updated: 19 March 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்வு அமைப்பின் சார்பில் சென்னை மாநகராட்சி கமி‌ஷனரிடம் மனு கொடுக்கப்பட்டது.

சென்னை,

மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்வு அமைப்பின் சார்பில் சென்னை மாநகராட்சி கமி‌ஷனரிடம் மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள சுடுகாடுகளில் இருந்து திருட்டுத்தனமாக தோண்டி எடுக்கப்படும் பிணங்கள் அண்டை மாவட்டங்களுக்கு கடத்தப்படுவது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும். இறந்தவரின் ஆன்மா சாந்தி அடையும் என்ற நம்பிக்கையில் தான் பொதுமக்கள் முறைப்படி நல்லடக்கம் செய்கிறார்கள்.

ஆனால் அதை பொய்யாக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாப்பூர் சுடுகாட்டில் 3 ஊழியர்கள் விலைபேசி இளம்பெண்ணின் பிணத்தை தோண்டி எடுத்து பெரம்பலூருக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

இனி இதுபோன்ற மனிதாபமற்ற செயல்களை தடுக்கும் வகையில் கண்டிப்பாக சுடுகாட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும். மேலும் அங்கு குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாநகராட்சி கமி‌ஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story