கொடுங்கையூர் எழில் நகரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை


கொடுங்கையூர் எழில் நகரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை
x
தினத்தந்தி 19 March 2017 2:57 AM IST (Updated: 19 March 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

பெரம்பூர்,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் எழில்நகர் பகுதியில் நேற்று உதவி தேர்தல் அதிகாரி சுந்தரேசன் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் கொடுங்கையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். அந்த வாகனங்களில் வந்தவர்களிடம் இருந்த பைகளையும் சோதனை செய்தனர். இந்த வாகன சோதனை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. 

Next Story