ஈரோடு மாவட்டத்தில் ரூ.108 கோடி மதிப்பிலான திட்ட பணிகள் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்


ஈரோடு மாவட்டத்தில் ரூ.108 கோடி மதிப்பிலான திட்ட பணிகள் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 March 2017 4:30 AM IST (Updated: 19 March 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் ரூ.108 கோடி மதிப்பிலான திட்ட பணிகள் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

ஈரோடு

ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் ரூ.1,313 கோடி மதிப்பிலான திட்ட பணிகள் தொடக்க விழா கோவை கொடீசியா அரங்கில் நேற்று நடைபெற்றது. அதேசமயம் ஈரோடு மாவட்ட திட்ட பணிகளுக்கான தொடக்க விழா நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது.

ஈரோடு மாவட்டத்தின் திட்ட பணிகளை தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், வருவாய் அதிகாரி ஆர்.சதீஸ் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ரூ.108 கோடி

விழாவில், ஈரோட்டில் ரூ.20 கோடியே 36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மாட்டுத்தீவன மில், சத்தியமங்கலத்தில் ரூ.86 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய போலீஸ் நிலையம், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.46 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட அன்னதானக்கூட கட்டிடம், அம்மாபேட்டை அருகே மாணிக்கம்பாளையத்தில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட தொடக்க கூட்டுறவு கடன் சங்க கட்டிடம், திங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடம், பெருந்துறையில் ரூ.41 லட்சம் செலவில் கட்டப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கட்டிடம்,

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ரூ.58 லட்சம் செலவில் பரிகார மண்டபம், பவானியில் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடம், ஓட்டுனர் தேர்வு தளம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டிடம், அவல்பூந்துறை பேரூராட்சியில் ரூ.93½ லட்சம் செலவில் கட்டிடம், அவல்பூந்துறை குளத்தில் ரூ.1கோடியே 72 லட்சம் செலவில் படகு இல்லம், பழனிக்கவுண்டன்வலசு பகுதி குரங்கன்ஓடையில் ரூ.1கோடியே 17 லட்சம் செலவில் கட்டப்பட்ட தடுப்பணை, சிவகிரி பாலமேட்டுபுதூரில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய கட்டிடம் உள்பட ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் ரூ.108 கோடியே 21 லட்சம் மதிப்பில் 361 திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

முதல்–அமைச்சருக்கு நன்றி

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்ட பணிகளை தொடங்கி வைத்த பிறகு பயனாளிகள் சார்பாக எலவமலையை சேர்ந்த கோமதி என்பவர் பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, ‘‘நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தோம். எங்களுக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. இந்தநிலையில் தமிழக அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் மூலம் நாங்கள் சொந்த வீடு கட்டி குடியேறி உள்ளோம். மறைந்தும் எங்கள் மனதில் வாழ்ந்து வரும் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மற்றும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்’’ என்றார்.


Next Story