விவசாயிகள் மீண்டும் கடனில் சிக்க கூடாது என்பதை உறுதிப்படுத்துவோம் சட்டசபையில் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு
‘‘விவசாயிகள் மீண்டும் கடனில் சிக்க கூடாது என்பதை உறுதிப்படுத்த அரசு முயற்சிக்கிறது’’ என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
மும்பை,
‘‘விவசாயிகள் மீண்டும் கடனில் சிக்க கூடாது என்பதை உறுதிப்படுத்த அரசு முயற்சிக்கிறது’’ என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுசட்டசபையில் விவசாய கடன் தள்ளுபடி பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. விவசாய கடனை தள்ளுபடி செய்ய கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து சிவசேனா உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதால் கடந்த இரண்டு வாரமாக சட்டசபையின் அலுவல் பணி பாதிக்கப்பட்டது. இந்த பிரச்சினைக்கு பதில் அளித்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று சட்டசபையில் பேசியதாவது:–
கடன் தொகையை செலுத்த தவறிய விவசாயிகளை கடன் நிறுவன அமைப்புக்குள் கொண்டு வரும் பொருட்டு, புதிய கொள்களை வகுப்பது பற்றி மத்திய அரசுடன் சாதகமான முறையில் ஆலோசனை நடத்தினேன். இந்த புதிய கொள்கையின்படி, வேளாண் துறையின் முதலீடு பாதிக்கப்படாது. மேலும், விவசாயிகளுக்கு பயன் அளிக்க கூடிய திட்டங்களுக்கு பங்களிப்பு செய்ய மாநில அரசு ஆர்வத்துடன் இருப்பதாக மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ராதா மோகன் சிங் ஆகியோரிடம் உறுதியளித்தேன்.
நிறுவன கடன் அமைப்புமராட்டியத்தில் விவசாய கடன் பெற்ற 1 கோடியே 36 லட்சம் பேரில், 31 லட்சம் பேர் ரூ.30 ஆயிரத்து 500 கோடி பாக்கி வைத்திருக்கின்றனர். இவர்கள் மீண்டும் கடன் பெற தகுதியற்றவர்கள். ஆகையால், அவர்களை நிறுவன கடன் அமைப்பு வரம்பிற்குள் கொண்டு வருவது அவசியம். அதேசமயம், குறித்த நேரத்தில் கடன் தொகையை திரும்ப செலுத்திய விவசாயிகளுக்கு நாங்கள் ஊக்கத்தொகை அளிப்போம்.
குறித்த நேரத்தில் கடன் தொகையை திரும்ப செலுத்தும் விவசாயிகள், பாக்கி வைக்கும்பட்சத்தில் அவர்களுக்கு கடன் தள்ளுபடி அளிக்கப்படும் என்று கூறினால், வங்கி அமைப்பு குழம்பி போய்விடும். மேலும், விவசாயிகள் மத்தியில் தவறான தகவல் சென்றுவிடும். விவசாயிகள் மீண்டும் கடனில் சிக்கி கொள்ள கூடாது என்ற சூழலை உறுதிப்படுத்துவதே அரசின் இலக்கு.
எதிர்க்கட்சி மீது தாக்குவிவசாய கடன் தள்ளுபடி பிரச்சினையில் கோஷம் எழுப்பி நீங்கள் (எதிர்க்கட்சி), விவசாயிகளுக்கான ‘மேசியா’ ஆக விட முடியாது. விவசாயிகளின் இன்றைய நிலைக்கு உங்களது 15 ஆண்டுகால ஆட்சி தான் காரணம்.
இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.