தன்னால் வஞ்சிக்கப்பட்ட விவசாயிகளிடம் முதல்–மந்திரி மன்னிப்பு கேட்கவேண்டும் சிவசேனா சொல்கிறது


தன்னால் வஞ்சிக்கப்பட்ட விவசாயிகளிடம் முதல்–மந்திரி மன்னிப்பு கேட்கவேண்டும் சிவசேனா சொல்கிறது
x
தினத்தந்தி 19 March 2017 3:56 AM IST (Updated: 19 March 2017 3:55 AM IST)
t-max-icont-min-icon

தன்னால் வஞ்சிக்கப்பட்ட விவசாயிகளிடம் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மன்னிப்பு கேட்கவேண்டும் என சிவசேனா கூறியுள்ளது.

மும்பை,

தன்னால் வஞ்சிக்கப்பட்ட விவசாயிகளிடம் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மன்னிப்பு கேட்கவேண்டும் என சிவசேனா கூறியுள்ளது.

சட்டசபை கூட்டத்தொடர்

விவசாய கடன் தள்ளுபடி விவகாரம் நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் பூதாகரமாக வெடித்தது. விவசாய கடனை தள்ளுபிடி செய்யக்கோரி எதிர்கட்சிகள் சட்டசபையில் தொடர் அமளியில் ஈடுபட்டதால், சட்டசபை அலுவல்கள் முடங்கின. எதிர்கட்சிகளுடன் சிவசேனாவும் இணைத்து கூட்டத்தை முடக்கியது, ஆளும் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இருப்பினும் கடன் தள்ளுபடி தற்போது கிடையாது என முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபையில் தைரியமாக அறிவித்தார். இந்த நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கத்தில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:–

முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபையில் மாநில அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்யாது என திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். அப்படியானால் சட்டசபை தேர்தலின் கடனை தள்ளுபடி செய்வதாக வாங்குறுதி அளித்து விவசாயிகளை ஏமாற்றியதற்காக அவர் மன்னிப்பு கேட்கவேண்டும்.

மறந்துவிடாதீர்கள்...

இனி இந்த மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் நடக்காது என உறுதி கூறி நீங்கள்(பா.ஜனதா) ஆட்சியை கைப்பற்றினீர்கள் என்தை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம்.

எனவே முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்து தங்கள் ஆட்சியின் இயலாமையை எடுத்துக்கூறி மன்னிக்குமாறு மன்றாடவேண்டும்.

சட்டசபையில் எதிர்கட்சி உறுப்பினர்களை பார்த்து தேவேந்திர பட்னாவிஸ் கேட்கிறார், ‘‘ கடனை தள்ளுபடி செய்தால் விவசாயிகளின் தற்கொலை நடக்காது என உங்களால் உறுதி அளிக்கமுடியுமா? என்று, பிரதமர் நரேந்திர மோடி கூட உயர்மதிப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்பட்டபோது பல்வேறு உறுதிமொழிகளை வாரி வீசினார். ஆனால் இதுவரை எதும் நிறைவேறியதாக தெரியவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story