மனைவி வீட்டை விட்டு சென்ற ஆத்திரத்தில் மகனை வெட்டிக்கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை


மனைவி வீட்டை விட்டு சென்ற ஆத்திரத்தில் மகனை வெட்டிக்கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 19 March 2017 3:58 AM IST (Updated: 19 March 2017 3:58 AM IST)
t-max-icont-min-icon

மனைவி வீட்டை விட்டு சென்ற ஆத்திரத்தில் மகனை அரிவாளால் வெட்டிக்கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து தானே செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தானே,

மனைவி வீட்டை விட்டு சென்ற ஆத்திரத்தில் மகனை அரிவாளால் வெட்டிக்கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து தானே செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மகன் கொலை

தானே மாவட்டம் பிவண்டி சிம்பிபாடாவை சேர்ந்தவர் பக்வான் ஆத்மாராம் ஜாதவ்(வயது30). செங்கல் சூளை தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் அங்கு வசித்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று நடந்த சண்டையின்போது, அவரது மனைவி கோபித்துக்கொண்டு 2 பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். பக்வான் ஆத்மாராம் ஜாதவுடன் அவரது 6 வயது மகன் அவினாஷ் மட்டும் இருந்தான்.

மனைவி வீட்டை விட்டு வெளியேறிய ஆத்திரத்தில் இருந்த பக்வான் ஆத்மாராம் ஜாதவ் மகன் அவினாசை அடித்து துன்புறுத்தி உள்ளார். மேலும் அரிவாளால் அவனது தலையில் வெட்டி இருக்கிறார். இதில், படுகாயம் அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்து போனான்.

ஆயுள் தண்டனை

சத்தம்கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் பக்வான் ஆத்மாராம் ஜாதவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து தானே மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது ஆத்மாராம் ஜாதவ் மீதான கொலை குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது குற்றவாளி ஆத்மாராம் ஜாதவுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story