மும்பை- டாடா நகர் இடையே அந்தியோதயா ரெயில் சேவை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்
தொலைதூர அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பை குர்லா டெர்மினஸ்- ஜார்கண்ட் மாநிலம் டாடாநகர் இடையே அறிவிக்கப்பட்டது.
மும்பை,
நாட்டில் பயணிகள் போக்குவரத்து அதிகம் உள்ள வழித்தடங்களில் ஏழை, எளியவர்களின் வசதிக்காக முன்பதிவு இல்லாத தொலைதூர அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பை குர்லா டெர்மினஸ்- ஜார்கண்ட் மாநிலம் டாடாநகர் இடையே அறிவிக்கப்பட்டது.
இந்த ரெயில் சேவை தொடக்க விழா நேற்று மும்பை குர்லா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் நடந்தது. இதில், ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு கலந்துகொண்டு அந்தியோதயா ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் அவர் குர்லா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள மெக்கானிக் பவர் லாண்டரி, சர்ச்கேட் ரெயில் நிலையத்தில் சூரிய மின்சக்தி அமைப்பு, சோலாப்பூர், குல்பர்கா உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் வை-பை வசதி ஆகியவற்றையும் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் புறநகர் மின்சார ரெயில் தயாரிப்பதற்கான பணி, புசவல்- ஜல்காவ் இடையே 4-வது வழித்தடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுதல் ஆகியவற்றை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் எம்.பி.க்கள் கிரித் சோமையா, ராகுல் செவாலே மற்றும் ரெயில்வே அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story