ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க ‘ஸ்வைப் மெஷின்’ மீதான வாட் வரி ரத்து வரி சலுகைகள், வரி விதிப்பு பற்றிய முழு விவரம்


ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க ‘ஸ்வைப் மெஷின்’ மீதான வாட் வரி ரத்து வரி சலுகைகள், வரி விதிப்பு பற்றிய முழு விவரம்
x
தினத்தந்தி 19 March 2017 4:14 AM IST (Updated: 19 March 2017 4:13 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி சலுகைகள் மற்றும் வரி விதிப்பு பற்றிய விவரங்கள் வருமாறு:-

மராட்டிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி சலுகைகள் மற்றும் வரி விதிப்பு பற்றிய விவரங்கள் வருமாறு:-

வாட் வரி

* 2016-17-ம் ஆண்டுக்கான கரும்பு கொள்முதல் வரி, விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் லாபகரமான விலை அளிக்க விலக்கு அளிக்கிறது. மேலும், 2015-16-ம் ஆண்டில் கரும்பு ஏற்றுமதி விலக்குக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் நீக்கப்படுகின்றன.

* அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மஞ்சள், மிளகாய், புளி, தேங்காய், கொத்தமல்லி விதைகள், வெந்தயம், அப்பளம் மற்றும் உலர் திராட்சை ஆகியவற்றின் மீதான மதிப்பு கூட்டு வரி (வாட்) விலக்கு நீடிக்கும்.

* சோலாப்பூரில் தயாரிக்கப்படும் பிரபல போர்வை மற்றும் துண்டுகளுக்கான மதிப்பு கூட்டு வரி விலக்கு நீடிக்கும்.

பால் கலப்பட கருவி

* விவசாயத்துக்காக மண்ணின் தன்மையை ஆராயும் பொருட்டு, அதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மீதான மதிப்பு கூட்டு வரி முற்றிலும் நீக்கம்.

* பால் கலப்படத்தை கண்டறிவதற்கான கருவிகளுக்கு விதிக்கப்பட்ட மதிப்பு கூட்டு வரி 13.5 சதவீதம் விலக்கி கொள்ளப்படுகிறது.

* விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருட்களுக்கான மதிப்பு கூட்டு வரி 5 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைப்பு.

ஸ்வைப் மெஷின்

* ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க ‘ஸ்வைப் மெஷின்’ மீது விதிக்கப்பட்டு வரும் மதிப்பு கூட்டு வரி 13.5 சதவீதம் ரத்து செய்யப்படுகிறது.

* கியாஸ் மற்றும் மின்னணு எரிவாயு மீதான மதிப்பு கூட்டு வரி 13.5 சதவீதம் ரத்து செய்யப்படுகிறது.

* இனிப்பு சோளம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2016-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை மதிப்பு கூட்டு வரியில் விலக்கு.

* ஜவுளி நிறுவனங்களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதியில் இருந்து 2012-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி வரை மதிப்பு கூட்டு வரியில் இருந்து விலக்கு. இதனால், சுமார் 200 யூனிட்டுகள் பயன்பெறும்.

* நூற்பாலைகளுக்கு கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து 2016-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை மதிப்பு கூட்டு வரி நீக்கம். இதனால், சுமார் 300 யூனிட்டுகள் பயன்பெறும்.

ஜி.எஸ்.டி. வரி

* உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் மீதான மதிப்பு கூட்டு வரி 23.08 சதவீதத்தில் இருந்து 25.93 சதவீதமாக உயர்வு.

* வாராந்திர லாட்டரி சீட்டுகளுக்கான வரி ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்வு.

* ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை) வரியை நடைமுறைப்படுத்த மராட்டியம் தயாராக இருக்கிறது.

* கடந்த 2015-16-ம் ஆண்டின் வருவாய் வளர்ச்சி வீதமான 14 சதவீதத்தின் அடிப்படையில் ஜி.எஸ்.டி. இழப்பீடு நிர்ணயிக்கப்படும்.

நிர்வாக மாற்றங்கள்

* மராட்டிய விற்பனை வரி தீர்ப்பாயத்தில் புதிதாக 3 பெஞ்சுகள் ஏற்படுத்தப்படும்.

* தனியார் நிறுவன இயக்குனர்களிடம் இருந்து மதிப்பு கூட்டு வரி வசூலிக்கப்படும்.

* பல்வேறு சட்டத்திட்டங்களின்படி கோர்ட்டு கட்டணம், அபராதம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும். 

Next Story