துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணியில் முறைகேடு இல்லை: நிதியை நேர்மையாக செலவிட வேண்டும் என்பது தான் எனது நோக்கம்
துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணியில் முறைகேடு இல்லை: நிதியை நேர்மையாக செலவிட வேண்டும் என்பது தான் எனது நோக்கம் கவர்னர் கருத்து
புதுச்சேரி,
துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணியில் முறைகேடு எதுவும் இல்லை. மத்திய அரசு நிதியை நேர்மையாக செலவிட வேண்டும் என்பது தான் எனது நோக்கம் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.
காலதாமதம்
புதுவை மீன்பிடி துறைமுக முகத்துவாரம் தூர்வாரப்படாததால் மணல் திட்டுகள் உருவாகி மீனவர்கள் கடந்த சில மாதங்களாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர். இந்த முகத்துவார பகுதியை ரூ.14 கோடி செலவில் தூர்வார திட்டமிடப்பட்டது.
கவர்னர் தலையீட்டின்பேரில் இந்த தூர்வாரும் பணி மத்திய அரசின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த பணி காலதாமதமாக தொடங்கியதால் மீனவர்களுக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டதாக கவர்னர் மீது அமைச்சர் கந்தசாமியும் குற்றஞ்சாட்டினார்.
இதற்கிடையே மத்திய அரசு நிறுவனம் தூர்வாரும் பணியை தொடங்கி நடத்தியது. இதைத்தொடர்ந்து ஓரளவு தூர்வாரப்பட்டு தற்போது விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றன. இதற்கிடையே ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு புதிதாக தனியார் மணல்வாரி கப்பல் ஒன்றும் தூர்வாரும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
கவர்னர் ஆய்வு
இந்தநிலையில் முகத்துவாரத்தில் தூர்வாரும் மணல் கடற்கரையில் காந்தி சிலையின் பின்புறம் அருகே கொட்டப்படாமல் முகத்துவாரம் அருகே கொட்டப்படுவதால் மீண்டும் மணல்மேடுகள் உருவாகும் என்று சமூக அமைப்புகள் குற்றஞ்சாட்டி இருந்தன. இதையொட்டி கவர்னர் கிரண்பெடி நேற்று முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது துறைமுகத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். அவர்களிடம் பணி நிலவரம் குறித்து கவர்னர் கிரண்பெடி கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தாமதத்துக்கு காரணம்
துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணியை ஆய்வு செய்துள்ளேன். ஆரம்பத்தில் இதில் சில பிரச்சினைகள் இருந்தன. தற்போது அது சரியாகிவிட்டது. இங்கு கடந்த 10 வருடங்களாக சரியாக தூர்வாரப்படவில்லை. சாக்குமூட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் முகத்துவாரம் அடைபட்டுள்ளது.
தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு நிறுவனத்துக்கு இதுபோன்ற விவரங்கள் முதலில் தெரியவில்லை. இதனால் அடிக்கடி அந்த மெஷின்கள் பழுதடைந்தன. இதுதான் தாமதத்துக்கு காரணம். இப்போது அவை சரிசெய்யப்பட்டுவிட்டன. இதன் மூலம் அவர்களுக்கும் ஒரு அனுபவம் கிடைத்துள்ளது. இந்த துறைமுக முகத்துவாரத்தை அடிக்கடி முறையாக தூர்வார வேண்டும்.
முறைகேடுக்கு வழி இல்லை
தூர்வாரும் பிரச்சினையில் என்னால் காலதாமதம் ஆகவில்லை. கடந்த காலங்களில் தூர்வாருவதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் வந்தன. புகார்களுக்கு இடமில்லாமல் செய்ய மத்திய மந்திரி நிதின்கட்காரியுடன் பேசி ஒருமித்த கருத்துடன் முடிவு எடுக்கப்பட்டு இந்த பணி கொடுக்கப்பட்டது. அது எனது தனிப்பட்ட முடிவு அல்ல. இது மத்திய அரசின் நிறுவனம் என்பதால் முறைகேட்டிற்கு வழியில்லை.
தற்போது தூர்வார இன்னொரு கப்பலும் வந்துள்ளது. புதுவையின் கவர்னர் என்ற முறையில் எனக்கு நிதி மேலாண்மை பொறுப்பும் உள்ளது. மத்திய அரசு தரும் நிதியை நேர்மையாகவும், சரியான முறையிலும் செலவிட வேண்டும். அந்த பணம் வீணாகக்கூடாது என்பதுதான் எனது நோக்கம். இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.
கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக கேட்ட போது, அந்த சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை இன்னும் தன்னிடம் வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.

Next Story