குதிரை ராணி
ஆண்களே ஆதிக்கம் செலுத்தி கோலோச்சிக்கொண்டிருக்கும் குதிரை பந்தய போட்டியில் தனியொரு பெண்ணாக தன்னை நிலைநிறுத்தி, சாதித்து கொண்டிருக்கிறார், ரூபா சிங்
ஆண்களே ஆதிக்கம் செலுத்தி கோலோச்சிக்கொண்டிருக்கும் குதிரை பந்தய போட்டியில் தனியொரு பெண்ணாக தன்னை நிலைநிறுத்தி, சாதித்து கொண்டிருக்கிறார், ரூபா சிங். இவர் இந்திய அளவில் தொழில் முறை குதிரைப்பந்தயங்களில் கலக்கிக்கொண்டிருக்கும் ஒரே பெண் ஜாக்கி என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இவருடைய பூர்வீகம் ராஜஸ்தான். சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.
ரூபாவின் தாத்தா உகம் சிங் ராத்தோட் அன்றைய ஆங்கிலேய ராணுவத்தில் இடம்பெற்ற போர் குதிரைகளுக்கு பயிற்சியாளராக இருந்தவர். தந்தை நர்பட்சிங், சகோதரர் ரவிந்தர்சிங் ஆகியோரும் குதிரை பயிற்சியாளர்கள். அதனால் ரூபாவுக்கும், குதிரைகளுக்கும் இடையேயான பந்தம் சிறுவயதிலேயே அரும்பியிருக்கிறது. 4 வயதிலேயே தாத்தாவுடன் குதிரை சவாரி செய்ய தொடங்கி இருக்கிறார். குதிரை கண்காட்சி மற்றும் குதிரை பந்தயங்களுக்கு தாத்தாவுடன் கலந்து கொள்ள சென்றவருக்கு நாளடைவில் குதிரைகளுடனான நெருக்கம் அதிகரித்திருக்கிறது.
பந்தயங்களில் சீறிப்பாயும் குதிரைகளை கைத்தட்டி ரசித்தவர் தானும் அதுபோல் போட்டிக்களத்தில் சவாரி செய்ய ஆசைப்பட்டிருக் கிறார். அவருடைய தந்தைக்கும், ‘ஆண்கள் மட்டுமே கோலோச்சும் குதிரைப்பந்தய களத்தில் தன் மகளும் சாதிக்க வேண்டும்’ என்ற எண்ணம் இருந்திருக் கிறது. மகளுக்கு பயிற்சி அளிக்க தொடங்கி இருக் கிறார். தந்தையின் பயிற்சி ஊக்கத்தை கொடுத்தாலும், 17 வயதில் வெளியிடங்களுக்கு பயிற்சிக்கு சென்ற ரூபா தனித்தே விடப்பட்டிருக்கிறார்.
ஆனால் ரூபா சிங், ‘குதிரை ராணி’யாக உருவானது அவ்வளவு எளிதாக நடந்தேறவில்லை. ஆரம்பத்தில் அவரது தாயாரே, மகள் குதிரை பந்தய பயிற்சி பெறுவதை விரும்பவில்லை. சீறும் குதிரையின் ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த முடியாமல் மகள் சறுக்கி விழுந்து பலத்த காயம் அடைந்து விட்டால் என்ன செய்வது? என்று பரிதவித்து இருக்கிறார். அந்த தடையையும் ரூபா சிங் தாண்டவேண்டிய நிலை உருவானது. ஆண்களுடன் ஒப்பிடும்போது அதற்கு தகுந்த உடல் வலிமை பெண்களிடம் இருக்காது என்ற எண்ணம் குதிரை உரிமையாளர்களிடம் இருந்தது. அதனால் பயிற்சியாளர்களும், குதிரை உரிமையாளர்களும் பெண் ஜாக்கிகளை பந்தய களத்தில் இறக்க ஆர்வம் காட்டாமலே இருந்தார்கள்.
பந்தய குதிரைகளை கடிவாளமிட்டு முன்னோக்கி செலுத்தி வெற்றிக்கனியை பறிப்பது ஆண்களுக்கே சவாலாக இருக்கும்போது பெண்களை வைத்து சோதனை ஓட்டம் நடத்தவே தொடக்கத்தில் யோசித்தார்கள். ரூபா விஷயத்திலும் அதுதான் நடந்தது. கஷ்டப்பட்டு பயிற்சி பெற்று தேறினாலும் குதிரை பந்தய களத்தில் அவரை நம்பி களம் இறக்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. ரூபா போராடித்தான் முதல் பந்தயத்தில் கலந்து கொண்டிருக்கிறார். பந்தயத்திற்கு நன்றாக பழக்கப்படுத்தாத சுமாரான குதிரையைத்தான் கொடுத்திருக்கிறார்கள். அந்த குதிரையையே சவாலாக இயக்கிக்கொண்டு போட்டியில் களம் இறங்கியவர் நான்காவது இடத்துக்கு முன்னேறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
அதற்கு பிறகுதான் அவர்களுக்கு ரூபா மீது நம்பிக்கை வந்திருக்கிறது. ரூபாவுக்கும், ‘பந்தயத்தில் வெற்றி பெற உடல் வலிமை மட்டும் போதாது. மன வலிமையும், குதிரையை கையாளும் திறனும் தேவை’ என்பதை முதல் பந்தயம் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதற்கு பிறகு தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு குதிரை பந்தயத் திற்கு உடலளவிலும், மனதளவிலும் தன்னை தயார் படுத்த தொடங்கி இருக்கிறார்.
ரூபா குதிரைகளின் மனோபாவத்தை புரிந்து கொண்டு அதற்கேற்ப பயிற்சியிலும், போட்டியிலும் சாதிக்க தொடங்கி இருக் கிறார். ரூபா இதுவரை 3500-க்கும் மேற்பட்ட பந்தயங்களில் பங்கேற்று இருக்கிறார். அவைகளுள் 720 போட்டிகளில் முதலிடத்தை பிடித்திருக்கிறார். தேசிய அளவிலான போட்டிகளில் ஏழு முறை சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தி இருக்கிறார். இவர் இலங்கை, ஜெர்மனி, அபுதாபி, போலந்து உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் களம் இறங்கி யிருக்கிறார். அங்கெல்லாம் வெற்றிக்கொடியை நட்டு, சர்வதேச அளவிலான பெண் ஜாக்கிகளின் தர வரிசை பட்டியலில் முதலாம் இடத்தை பிடித்துவிட்டார்.
இவர் உடலை மிகுந்த கட்டுக்கோப்புடன் பராமரித்து வருகிறார். குதிரைப் பந்தயப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் 60 கிலோவுக்குள் இருக்க வேண்டும். இல்லையென்றால் போட்டிக்களத்துக்குள் நுழைய முடியாது. அதனால் ரூபா எடைக்கட்டுப்பாடு, உணவுக் கட்டுப்பாடுகளில் தீவிர கவனம் செலுத்துகிறார். உடற்பயிற்சி, யோகாசன பயிற்சிகளை மேற்கொள்வதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இவருக்கு 34 வயது. திருமணமான பின்னரும் தொடர்ந்து பந்தய களத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி கொண்டிருக்கிறார்.

Next Story