திருப்பத்தூரில் போக்குவரத்து ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம்


திருப்பத்தூரில் போக்குவரத்து ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 March 2017 3:45 AM IST (Updated: 19 March 2017 8:42 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருப்பத்தூர் பணிமனை ஓய்வூதியதாரர்கள்

திருப்பத்தூர்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருப்பத்தூர் பணிமனை ஓய்வூதியதாரர்கள் சார்பில் ஓய்வூதியம் வழங்காததை கண்டித்து திருப்பத்தூர் பணிமனை நுழைவுவாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தின் போது, ஓய்வூதியம் உடனடியாக வழங்க வேண்டும் என கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் 150–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 1½ மணி நேரம் அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பணிமனையில் இருந்து பஸ்கள் எதுவும் வெளியே போக முடியாத நிலை ஏற்பட்டது.


Next Story