மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை


மாவட்டம் முழுவதும்  போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 20 March 2017 4:00 AM IST (Updated: 19 March 2017 9:02 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிவகங்கை,

கருத்தரங்கம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆகியவை சார்பில் கருத்தரங்கு சிவகங்கையில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் காந்திமதி, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தமிழரசன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாந்தி வரவேற்று பேசினார். மாநில செயலாளர் பாலபாரதி, மாநில பொருளாளர் மல்லிகா, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் வாசுகி, அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மகளிர் துணைக்குழு பொறுப்பாளர் பாண்டியம்மாள், மாவட்ட துணை தலைவர் மணியம்மா, நிர்வாகிகள் புவனேஸ்வரி, சண்முகபிரியா, ஜோதீஸ்வரி, பானுமதி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

குடிநீர் பிரச்சினை

பின்னர் கூட்டத்தில், பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக உறுதி திட்டத்தில் 150 நாட்களுக்கு முழுமையாக வேலை வழங்க வேண்டும். மேலும் இதுவரை வேலை செய்தவர்களுக்கு, 6 மாதமாக வழங்காத ஊதியத்தை வழங்க வேண்டும். பெண்கள் மீதான தாக்குதலை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். சிவகங்கை மாவட்டம் முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள் தண்ணீர் தேடி குடங்களுடன் அலைகின்றனர். எனவே மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் தற்போது எராளமான ரே‌ஷன் கார்டுகள் முன்னுரிமையற்ற கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இவைகளை ஏற்கனவே இருந்தது போல் மாற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story